பணத்தை மட்டுமே எண்ண நினைக்கும் அடிமைகளுக்கு மக்களை பற்றிய சிந்தனை இருக்காது என்பதற்கு இந்த ஊரடங்கில் பதுங்கிவிட்ட ஆட்சியாளர்களே சாட்சி. ஆனால் இந்த பேரிடரிலும் மக்களுக்காக மக்களுடன் நின்று #OndrinaivomVaa என்ற @mkstalin அவர்களே உண்மையான தலைவர், மக்கள் தலைவர்!#மக்கள்_பணியில்_திமுக
— Udhay (@Udhaystalin) May 12, 2020
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியது. இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.
இந்த நிலையில், திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஒன்றிணைவோம் வா" திட்டம் குறித்தும், அதிமுக அரசு குறித்தும் விமர்சித்துள்ளார். அதில், பணத்தை மட்டுமே எண்ண நினைக்கும் அடிமைகளுக்கு மக்களை பற்றிய சிந்தனை இருக்காது என்பதற்கு இந்த ஊரடங்கில் பதுங்கிவிட்ட ஆட்சியாளர்களே சாட்சி. ஆனால் இந்த பேரிடரிலும் மக்களுக்காக மக்களுடன் நின்று, 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தின் மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களே உண்மையான தலைவர், மக்கள் தலைவர் என்றும், தலைவரையும் உங்களையும் பயனாளிகள் கொண்டாடுகிறார்கள்!’ – அனைத்து அமைப்பாளர்களும் ஒரே குரலில் சொன்ன வார்த்தைகள் இவை. ஆனால், இந்த வைரஸ் தொற்று சூழலில் நான் சொன்னேன் என்பதற்காக உயிரைக்கூட துச்சமென மதித்து களத்தில் நின்ற இளைஞரணியினருக்குத்தான் அனைத்து பாராட்டுகளும் போய்ச்சேரும்! என்றும் குறிப்பிட்டுள்ளார்.