சீனியர் அமைச்சர்கள் சிலரோடு, தமிழகத்தில் கரோனாவின் பாதிப்பு அதிகரிப்பது குறித்தும், அரசுமீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் எடப்பாடி கவலையோடு பேசியதாகச் சொல்லப்படுகிறது. முதல்வர் எடப்பாடிக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் இடையிலான உரசல் இன்னும் அதிகமாகி கொண்டிருக்கிறது என்று கோட்டை வட்டாரங்களில் கூறிவருகின்றனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் ஓப்பனாகத் தனது கோபத்தைக் காட்ட என்ன காரணம் என்று விசாரித்த போது, அமைச்சர்களுடன் எடப்பாடி நடத்திய ஆலோசனைக் கூட்டம் முடிந்து வெளியே வந்த விஜயபாஸ்கர், தன் சக அமைச்சர்கள் சிலரிடம், "பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. முதலமைச்சர் பார்க்கும் துறை உள்பட எந்தத் துறையிலும் ஊழல் நடக்கவில்லையா? என்னை அவர் ராஜேந்திர பாலாஜின்னு நினைச்சிக்கிட்டு இருக்காரா? என் கைவசம் 25 எம்.எல்.ஏ.க் கள் இருக்காங்க. செப்டம்பரில் சின்னம்மா சசிகலா ரிலீசாகி வரப்போகிறார்கள். அப்போது எல்லாத்தையும் பாருங்கள் என்று கோபத்துடன் சொல்லியதாகக் கூறுகின்றனர்.