ஜார்கண்ட்டில் ஜே.எம்.எம். மற்றும் காங்கிரஸ் கூட்டணி, ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில், அங்கே முதல்வராகப் பொறுப்பேற்ற ஜே.எம்.எம். கட்சித் தலைவர் ஹேமந்த் சோரனின் பதவி ஏற்பு விழாவில் ஸ்டாலின் கலந்துக்கிட்டார். அந்த விழாவில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றார்கள். தமிழகத்தில் இருந்து தி.முக. சார்பில் அதன் தலைவர் ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் சென்று இருந்தார்கள்.
அங்கே ஹேமந்த் சோரனுக்கு அடுத்து எல்லோராலும் தடபுடலாக வரவேற்கப்பட்டவர் ஸ்டாலின் தான் என்று கூறுகின்றனர். ராகுல் தொடங்கி மம்தா வரை, ஸ்டாலினிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் நடத்தப்பட்ட பிரமாண்ட பேரணி குறித்தும் ஆர்வமாக விசாரித்துள்ளார்கள். ஸ்டாலினோ, மோடி அரசின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து கொல்கத்தா, சென்னையில் நடத்தப்பட்டது போல், இந்தியத் தலைநகரான டெல்லியிலும் ஒரு மிரட்டல் பேரணியை நாமெல்லாம் ஒன்று சேர்ந்து விரைவில் நடத்தனும்ன்னு ஆலோசனை கூறியிருக்கிறார். இதற்கு எல்லோரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மத்தியில் ஆளும் பாஜக தரப்பு எதிர்கட்சியினரின் திட்டத்தை அறிந்து அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.