




Published on 07/01/2021 | Edited on 07/01/2021
தி.மு.க. சிறுபான்மையினர் அணி சார்பில் ‘நல்லாட்சி மலர்ந்திட இதயங்களை இணைப்போம்' எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று (06.01.2021) மாலை நடைபெற்ற கருத்தரங்கிற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மேலும், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி, தயாநிதி மாறன் எம்.பி., மாவட்டச் செயலாளர்கள் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத்தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.