Skip to main content

“மக்கள் பிரச்சனைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை..” - பிரேமலதா விஜயகாந்த்!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

"The central government does not listen to the problems of the people ..." - Premalatha

 

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீபூவராகசுவாமி கோவிலில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் விஜயபிரபாகர் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

 

தரிசனத்தை முடித்துவிட்டு  செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, “பெட்ரோல், டீசல், சிலிண்டர் ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.  மக்கள் பிரச்சனைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இதுபோன்று விலை உயர்வால் கட்டுமான பொருட்கள் முதல் அனைத்து பொருட்களும் விலையேறி உள்ளன. மத்திய, மாநில அரசுகள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். வரும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது அப்போதுதான் முடிவு செய்யப்படும். திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் பாதகமும் இல்லை சாதகமும் இல்லை” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்