Skip to main content

நானும் என் வங்கி கணக்கை தினமும் பார்க்கிறேன்... பாஜகவை வம்பிழுத்த தயாநிதிமாறன்!  

Published on 29/11/2019 | Edited on 29/11/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக தமிழ்நாட்டில் 38 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. திமுக சார்பாக மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தயாநிதி மாறன். மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் 3,00,437 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்படத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசும் போது,  ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற முழக்கத்துடன், குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டது. மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெகஜீவன் ராம், சென்னைக்கு வந்து இவற்றை பார்த்துவிட்டுத்தான், டெல்லியில் இந்திரா ஆவாஜ் யோஜனா என்ற திட்டத்தை வகுத்தார். பாஜகவோ அதை பிரதமர் ஆவாஜ் யோஜனா என, மாற்றிச் சொல்கிறது. அனைத்துக்குமே, தமிழகம்தான் முன்மாதிரியாக இருந்தது.
 

dmk



டில்லியில், குடியிருப்புகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையை, மத்திய அரசு, டெல்லி சட்டசபை தேர்தலை மனதில் வைத்து தான் எடுக்கிறது. அதையும் முழு மனதோடு செய்யாமல், அரைகுறையாக செய்து வருகிறது. தேர்தலையொட்டி, பிரதமர் அளித்த வாக்குறுதியின்படி, ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும், 15 லட்ச ரூபாய் போட்டிருக்க வேண்டும். நான் தினந்தோறும், என் வங்கி கணக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறேன். எந்தப் பணமும், வந்து சேரவில்லை என காமெடியாக தெரிவித்துள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்