Published on 24/05/2019 | Edited on 24/05/2019
நேற்று காலையில் இருந்து நடந்த வாக்கு எண்ணிக்கையில் மத்தியில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறது.தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களில் மிக பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் திமுக சார்பில் சேலம் மக்களவை தொகுதியில் எஸ்.ஆர்.பார்த்திபனும்,அதிமுக சார்பில் சரவணனும் போட்டியிட்டனர்.முதல்வரின் சொந்த மாவட்டம் என்பதால் அங்கு அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று எதிர் பார்த்தனர்.
![eps](http://image.nakkheeran.in/cdn/farfuture/UBulvBCTj1CEMrO8xAKkDZk4s3bZKQaK9rTd_Xop61o/1558698298/sites/default/files/inline-images/242.jpg)
ஆனால் நிலைமை வேறு மாதிரி அங்கு அமைந்தது திமுக வேட்பாளர் 6 இலட்சத்து 6 ஆயிரத்து 302 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 1இலட்சத்து 46 ஆயிரத்து 926 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.மேலும் முதல்வரின் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் 800 வாக்குகள் அதிகம் பெற்றது அதிமுக கட்சியினரிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.