Published on 04/06/2019 | Edited on 04/06/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றியது.அதிமுக,பாஜக கூட்டணி தேனி தொகுதியை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது.இந்த தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி தமிழகத்தில் ஒரு மாற்று சக்தியாக வரும் என்று பார்த்த நிலையில் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியை சந்தித்தது.மேலும் போட்டியிட்ட அனைத்து இடத்திலும் டெபாசிட்டையும் இழந்தது.இதனால் தினகரன் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் தேர்தலுக்காக செலவு செய்த வேட்பாளர்கள் கடனை அடைக்க முடியாமல் இருப்பதாக செய்திகள் வருகின்றன.மேலும் தினகரன் கட்சி வேட்பாளர்கள் அதிமுக,திமுக கட்சிக்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.ஏற்கனவே தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்ததையடுத்து, நேற்று தினகரன் கட்சியின் திருநெல்வேலி வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் அதிமுகவில் இணைந்துள்ளார்.இது தினகரன் கட்சிக்கு மேலும் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுக்கு பின்னர் தினகரன் கட்சியில் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மிகவும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.இதனால் மேலும் சில வேட்பாளர்கள் கட்சி மாறும் மனநிலையில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.