Skip to main content

தினகரன் போட்ட உத்தரவு! அதிர்ச்சியில் அதிமுக, அமமுக!

Published on 05/08/2019 | Edited on 05/08/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா மற்றும் சிலர் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறியது தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் கட்சியை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் அக்கட்சியின் பொது செயலாளர் தினகரன். இந்த நிலையில்,அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா தினகரன் தலைமையில் சென்னை வானகரத்தில் நடந்தது. 
 

ammk



அப்போது தினகரன் பேசும் போது,  அமமுகவினர் அதிமுகவினருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது. அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்கக்கூடாது. திமுக எப்படி நமக்கு எதிரியோ அதுபோல் அதிமுக நமக்கு துரோகி. அம்மாவுடன் 30 வருடம் அரசியலில் ஒன்றாக பயணம் செய்தவன் நான் என்று கூறினார். அதிமுகவினர் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்று தினகரன் கூறியது அமமுக கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி விசாரித்த போது, உறவினர்கள் எல்லா காட்சியிலும் இருப்பார்கள் அதற்காக அவங்க வீடு நிகழ்ச்சிக்கு போகக் கூடாது என்று சொல்வது சற்று அதிர்ச்சியாக உள்ளது என்று அக்கட்சி தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.   

சார்ந்த செய்திகள்