தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தேமுதி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்போர் விபரம் குறித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிறுவனத் தலைவர், கழக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவிப்பு:
’’தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி வாழும் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொழுது பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய என்கவுண்டர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் 28.05.2018 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்டமாக ஒன்று சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகளும், கழக தொண்டர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்பவர்கள் விவரம்:
பிரேமலதா விஜயகாந்த் -காஞ்சிபுரம் மாவட்டம், அழகாபுரம்.ஆர்.மோகன்ராஜ்,Ex:MLA கழக அவைத்தலைவர் - சென்னை மாவட்டம், எல்.கே.சுதீஷ் கழக துணை செயலாளர் - திருவள்ளூர் மாவட்டம், ப.பார்த்தசாரதி,Ex:MLA, கழக துணை செயலாளர் - திருவண்ணாமலை மாவட்டம், .ஏ.எஸ்.அக்பர் கழக துணை செயலாளர் - ஈரோடு மாவட்டம், பேராசிரியர்.எஸ்.சந்திரா கழக துணை செயலாளர் - தேனீ மாவட்டம், எம்.ஆர்.பன்னீர் செல்வம் கழக வழக்கறிஞர் அணி செயலாளர் / கழக உயர்மட்ட குழு உறுப்பினர் - புதுக்கோட்டை மாவட்டம்,
பி.கிருஷ்ணமூர்த்தி கழக உயர்மட்டகுழு உறுப்பினர் - வேலூர் மாவட்டம், ஜெ.பாலன் கழக உயர்மட்டகுழு உறுப்பினர் - சிவகங்கை மாவட்டம், செல்வ.அன்புராஜ் கழக கேப்டன் மன்ற செயலாளர் - திண்டுக்கல் மாவட்டம், P.ராஜாசந்திரசேகர் கழக கேப்டன் மன்ற துணை செயலாளர் - அரியலூர் மாவட்டம், கே.ஏ.சுல்தான்பாஷா
கழக கேப்டன் மன்ற துணை செயலாளர் - பெரம்பலூர் மாவட்டம், ஈ.எம்.பொன்னுசாமி கழக கேப்டன் மன்ற துணை செயலாளர் - நீலகிரி மாவட்டம் கு.நல்லதம்பி,E x:MLA.,கழக இளைஞர் அணி துணை செயலாளர் - கிருஷ்ணகிரி மாவட்டம்,
மாலதி வினோத் கழக மகளிர் அணி செயலாளர்- நாமக்கல் மாவட்டம், சுபமங்கள டில்லிபாபு கழக மகளிர் அணி துணை செயலாளர் - கடலூர் மாவட்டம், பா.ஜான்சிராணி கழக மகளிர் அணி துணை செயலாளர் - திருநேல்வேலி மாவட்டம், ஏ.எம்.ஜி.விஜயகுமார் கழக மாணவர் அணி செயலாளர் - நாகப்பட்டினம் மாவட்டம், எஸ்.கணேசன் கழக தொண்டர் அணி செயலாளர் - விழுப்புரம் மாவட்டம், எஸ்.எஸ்.எஸ்.யு.சந்திரன் கழக வர்த்தக அணி செயலாளர்- தருமபுரி மாவட்டம்,
டாக்டர்.ப.இராமநாதன் கழக மருத்துவர் அணி செயலாளர் -கரூர் மாவட்டம், .கோதை.எஸ்.மாரியப்பன் கழக நெசவாளர் அணி துணை செயலாளர் - இராமநாதபுரம் மாவட்டம், எம்.வி.எஸ்.இராஜேந்திரநாத் கழக கலை-இலக்கிய அணி துணை செயலாளர் - மதுரை மாவட்டம், சிங்கை.கே.சந்துரு கழக கலை-இலக்கிய அணி துணை செயலாளர் - திருப்பூர் மாவட்டம், ஜி.காளிராஜன் தொழிற்சங்க பேரவை செயலாளர்- தஞ்சாவூர் மாவட்டம், எஸ்.முஜிபூர் ரஹ்மான் தொழிற்சங்க பேரவை பொருளாளர் - திருச்சி மாவட்டம்,
டி.கே.விஜய் வெங்கடேஷ் தொழிற்சங்க பேரவை துணை தலைவர்- கன்னியாக்குமரி மாவட்டம், எஸ்.மாதவன் தொழிற்சங்க பேரவை துணை தலைவர் - திருவாரூர் மாவட்டம், பி.வேணுராம் தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் - கோவை மாவட்டம், தா.ஆதிளிங்கபெருமாள் தொழிற்சங்க பேரவை துணை செயலாளர்- விருதுநகர் மாவட்டம், ஆர்.உமாநாத் முன்னாள் கழக துணை செயலாளர்- சேலம் மாவட்டம்.’’