திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மாநாடு 28 ம் தேதி துவங்கி 31 ம் தேதி முடிவடைந்தது.
மாநாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து பெருந்திரல் மக்கள் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிரைவேற்றினர்.
நான்காவது நாளான இன்று 31 ம் தேதி மதியம் மாநில செயலாளர் தேர்வுக்கான மாநில செயற்குழு கூடியது. மாலை 5 மணிக்கு மீண்டும் முத்தரசனே மாநில செயலாளராக தொடருவார் என ஒருமனதாக அறிவித்தனர். முத்தரசனே இரண்டாவது முறையாக மாநில செயலாளராக தொடருவார் என சி,மகேந்திரன் முன்மொழிந்தார். முத்தரசன் மீண்டும் மாநில செயலாளராக தேர்வுசெய்யப்பட்டதற்கு அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துக்கூறினர்.
மாநில செயலாளர் தேர்வை தொடர்ந்து மன்னார்குடி தேரடியில் பேரணியாக புரப்பட்டு பந்தளடி, கடைவீதீ, மருத்துவமனை வழியாக மாநாட்டுப்பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தனர். செம்படை பேரணியால் மன்னார்குடியே ஸ்தம்பித்து நின்றது. பேரனியில் தமிழர்களின் பாரம்பரிய இசையான பரையிசை, கரகாட்டம் உள்ளிட்டவைகள் முழங்கின, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
எழுபத்து ஐந்தாயிரம் பேருக்கு மேல் வந்த பேரணியை தேசிய தலைவர்கள், மாநில தலைவர்கள் என அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு வளைவுகளிலும் வரவேற்று முழக்கமிட்டனர்.
இவ்வளவு பெரிய கூட்டத்தை மன்னார்குடி இதுவரை ஒரே நேரத்தில் கண்டிடவில்லை என்றும், அதே போல அமைதியான முறையில் பேரணியாக சென்றதை கண்டதில்லை என புலகாங்கித்தனர் வர்த்தகர்கள்.