Published on 13/01/2022 | Edited on 13/01/2022
![Kamal tweets revealing first phase candidate list!](http://image.nakkheeran.in/cdn/farfuture/zvC81UQpJGt36lTtzhvzhrwG06x8UydwuahnLBAXBRA/1642045965/sites/default/files/inline-images/kamal_128.jpg)
ஊரக உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து நகர்ப்புற தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் நகர்ப்புற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை வெளியிட்டுள்ள அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 'நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று வாகை சூட என் வாழ்த்துக்கள்' என டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
![kamal](http://image.nakkheeran.in/cdn/farfuture/Wq8Ha7qkcTqiVUg7y2SpzJH3MJP1hRQ6Jk_bJsv_PRg/1642046302/sites/default/files/inline-images/45646.jpg)
இதுகுறித்த பதிவில், 'பல்லாண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்னைகளுடன் தமிழக நகரங்கள் அல்லாடுகின்றன. இவைகளைத் தீர்க்கும் தகுதியும் திறனும் கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறேன். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாகை சூட என் வாழ்த்துக்கள்' தெரிவித்துள்ளார்.