Published on 16/03/2020 | Edited on 16/03/2020
இந்தியாவில் கரோனா வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 110யை தாண்டியுள்ளது. இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த நிலையில் கரோனா பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக எல்லையோர மாவட்டங்களான தேனி, குமரி, திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, நெல்லை, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறவிருந்த திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் மார்ச் 31- ஆம் தேதி வரை ஒத்தி வைக்க வேண்டும் என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.