Skip to main content

நபி குறித்து சர்ச்சை பேச்சு; பாஜக எம்.எல்.ஏ கட்சியில் இருந்து நீக்கம்

Published on 23/08/2022 | Edited on 23/08/2022

 

rajasing

 


நபியை இழிவுபடுத்தியதாக தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ ராஜாசிங்கை கட்சியில் இருந்து பாஜக நீக்கியுள்ளது. 

 


குஜராத்தை சேர்ந்த முனவர் ஃபரூக்கி அடிக்கடி அரசியல் கட்சிகளை கிண்டல்கள் செய்து பேசுவார். குறிப்பாக மத்திய அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் விமர்சித்து பேசுவார். இந்த நிலையில் ஹைதராபாத்திற்கு விழா ஒன்றில் பேசுவதற்காக அவர் வந்த போது இந்துத்துவா அமைப்பினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர். நிகழ்ச்சி முடிந்து வந்த பார்வையாளர்கள் நிகழ்ச்சியில் அரசியல் கருத்து  ஏதும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறியதால் பெரும் பிரச்சனைகள் இன்றி அந்த நிகழ்ச்சி முடிந்தது. 

 


இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ ராஜ்சிங் முனவர் ஃபரூக்கியையும் அவரது தாயாரையும் குறித்து அவதூறாக பேசி வீடியோ பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். 10 நிமிடங்களுக்கும் அதிகமாக இருந்த அந்த பதிவில் இறைத்தூதர் நபி குறித்தும் அவர் சர்ச்சையாகவும் இழிவாகவும் பேசியது பெரும் எதிர்ப்பிற்கு உள்ளானது. அவரை கைது செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். காவல் துறையும் அவரின் மேல் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளது. இந்நிலையில் பாஜகவில் இருந்து அவர் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்