Skip to main content

“திராவிட கொள்கையைக் கடைப்பிடிப்பதில் முதலமைச்சர் ஸ்டாலின் சமரசமின்றி உள்ளார்” - வைகோ

Published on 07/06/2022 | Edited on 07/06/2022

 

"Chief Minister Stalin is uncompromising in pursuing Dravidian policy" - Vaiko

 

புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, “தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் இருப்பதாகவே தெரியவில்லை. மக்களின் பேராதரவோடு கலைஞர் வகுத்து தந்த பாதையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மிக சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.

 

பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலகட்டம் தமிழ்நாட்டின் பொற்காலம். திராவிட கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் எந்த சமரசமுமின்றி முதலமைச்சர் ஸ்டாலினும், தி.மு.கவும் உறுதியோடு இருக்கிறது. தி.மு.க அரசின் ஓர் ஆண்டு கால ஆட்சிக்கும் பா.ஜ.க வின் எட்டாண்டுகால ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது. தி.மு.கவின் ஓர் ஆண்டு ஆட்சியை மலை என்று கூறினால் பா.ஜ.க வின் எட்டாண்டுகள் ஆட்சியை மடு என்று தான் கூற வேண்டும்” என்றார்.


இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு திருச்சி வந்த வைகோவிற்கு ம.தி.மு.க வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்