Published on 20/12/2018 | Edited on 20/12/2018

அமைச்சர் சண்முகம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், உயர்நீதிமன்ற உத்தரவால் பொன்.மாணிக்கவேல் தப்பித்து வருகிறார். பொன்.மாணிக்கவேல் நேர்மையானவர் என்று யார் சொன்னது? சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் உள்நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்.

நேர்மையான அதிகாரி என்றால் குற்றச்சாட்டுகளுக்கு பொன்.மாணிக்கவேல் பதில்தர வேண்டும். குற்றச்சாட்டுகளை மேற்பார்வை செய்யத்தான் பொன்.மாணிக்கவேலுக்கு அதிகாரம் உள்ளது. குற்றச்சாட்டுகளை எப்படி பதிய வேண்டும் என்று கூற பொன்.மாணிக்கவேலுக்கு அதிகாரம் கிடையாது. பொன்.மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.