முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுக தலைமையுடன் முரண்பட்டு வரும் பாஜக தலைமை, அதிமுக கூட்டணியை தொடர்வதா? அல்லது முறித்துக் கொள்வதா? என்கிற முடிவுக்கு வரவில்லை. அதேசமயம், தமிழகத்தில் கூட்டணி குறித்து பல்வேறு விவாதங்களை நடத்தியபடி இருக்கிறார் மத்திய அமைச்சர் அமீத்ஷா. வருகிற 14-ந்தேதி சென்னைக்கு விசிட் அடிக்க அவர் திட்டமிட்டிருக்கிறார். அவரது வருகையின் போது கூட்டணி குறித்து உறுதியான முடிவை தமிழக பாஜகவினருக்குத் தெரிவிப்பார் என்கிறது கமலாலய வட்டாரம்!
இதற்கிடையே, அதிமுகவுடன் கூட்டணி தொடரும் பட்சத்தில் 45 இடங்களுக்கு குறைவில்லாமல் போட்டியிட நினைக்கும் பாஜக, தற்போது 38 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் தயாரித்து வைத்திருக்கிறதாம். தயாரிக்கப்பட்டுள்ள அந்த உத்தேசப் பட்டியல் 90 சதவீதம் மாறுவதற்கு வாய்ப்பில்லை என்கிறார்கள்.
இதோ அந்த உத்தேசப்பட்டியல்…
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி – திருமதி.குஷ்பு சுந்தர்.சி.
தி.நகர்-ஹெச்.ராஜா, கொளத்தூர் – ஏ.என்.எஸ்.பிரசாத்,
மயிலாப்பூர் – கரு.நாகராஜன், துறைமுகம்-வினோஜ்,
வேளச்சேரி – டால்ஃபின் தரணி , மாதவரம்-சென்னைசிவா,
திருவள்ளூர்-லோகநாதன், செங்கல்பட்டு-கே.டி.ராகவன்,
கே.வி.குப்பம்-கார்த்தியாயினி, பென்னாகரம் - வித்யாராணி,
திருவண்ணாமலை - தணிகைவேல், போளூர்-சி.ஏழுமலை,
ஓசூர்-நரசிம்மன், சேலம் மேற்கு-சுரேஷ்பாபு ,
மொடக்குறிச்சி-சிவசுப்ரமணியன், ராசிபுரம் வி.பி.துரைச்சாமி,
திருப்பூர் வடக்கு- மலர்க்கொடி, கோவை தெற்கு - வானதி சீனிவாசன்,
சூலூர்-ஜி.கே.நாகராஜ் , திருச்சி கிழக்கு-டாக்டர் சிவசுப்பிரமணியம்,
பழனி-என்.கணகராஜ்,
அரவக்குறிச்சி – அண்ணாமலை ஐ.பி.எஸ். (ஓய்வு),
ஜெயங்கொண்டம்-அய்யப்பன், திட்டக்குடி-தடா பெரியசாமி,
பூம்புகார்- அகோரம், மயிலம்-கலிவரதன், புவனகிரி-இளஞ்செழியன்,
திருவையாறு-பூண்டி வெங்கடேசன், தஞ்சை-கருப்பு முருகானந்தம்,
கந்தர்வக்கோட்டை-புரட்சி கவிதாசன், சிவகங்கை-சத்தியநாதன்,
பரமக்குடி-பொன்.பாலகணபதி, மதுரைகிழக்கு-இராம. சீனிவாசன்,
நெல்லை-நயினார் நாகேந்திரன், சாத்தூர்-மோகனராஜுலு,
தூத்துக்குடி-சசிகலா புஷ்பா, நாகர்கோவில் - எம்.ஆர்.காந்தி