நடந்து முடிந்த நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல்களில் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்து இது குறித்து கட்சி நிர்வாகிகள்,தேர்தல் பொறுப்பாளர்கள்,மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களிடம் தீவிர ஆலோசனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது.இடைத்தேர்தலில் 22 தொகுதியில் 9 இடங்களை மட்டுமே அதிமுக கைப்பற்றியது.தேர்தலில் ஓட்டு சதவிகிதம் கடந்த தேர்தலை விட 20சதவிகித வாக்குகளை குறைவாக அதிமுக பெற்றது.
இது அதிமுக கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட அனைத்து கூட்டணி வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர்.இந்த நிலையில் தோல்வி குறித்து மாவட்டம் வாரியாக அதிமுக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை தொகுதியிலும் அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் தேர்தல் முடிவு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் பேசும்போது, தமிழக மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தனைக்கும் மானாமதுரை சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாகராஜனுக்கும், சிவகங்கை எம்பி தொகுதியில் பாஜக வேட்பாளா எச்.ராஜாவுக்கும் அதிமுக நிர்வாகிகளும்,கூட்டணி கட்சியினரும் நன்றாக தான் வேலை பார்த்தார்கள். ஆனால் அங்கு எச்.ராஜா தோல்வியை தழுவினார். இதற்கு காரணம் பாஜகவை தமிழக மக்கள் ஏற்காததுதான்" என்று கூறினார்.