Skip to main content

டெல்லியைப் போல் தமிழகத்திலும் நடக்கும்... பாஜகவின் எச்.ராஜா சர்ச்சை கருத்து! 

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.  மேலும் வன்முறையில் காயமடைந்த 150 பேர் டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக டெல்லியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் துணை ராணுவ படையினர், டெல்லி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் டெல்லியில் மஜ்பூர், ஜாப்ராபாத், சந்த்பாக், கர்வால் நகர் ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 
 

bjp



இந்த நிலையில், வன்ணாரப்பேட்டையிலும் இதுபோல கலவரம் வரும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "கடந்த 2 நாட்களாக டில்லியில் நடப்பது வண்ணாரப்பேட்டையில், தமிழகத்தில் ஏற்படலாம். வண்ணாரப்பேட்டையிலும் முஸ்லீம் பெண்கள் காவல்துறையினர் மீது கற்களையும் செருப்புக் களையும் வீசினார்கள் என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார். ஆயுதங்கள் வருமுன் இவர்கள் அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட வேண்டும் என்றும், டில்லி கலவரத்தை அடக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம். மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர். தமிழகத்தில் காவல்துறைக்கு இச்சுதந்திரம் எப்போது" என்றும் கூறியுள்ளார். எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்