குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு கடந்த 29-ந் தேதி மேலப்பாளையத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அமைச்சர் அமித்ஷாவையும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தேச நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாகவும் நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை கண்ணனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முஸ்லீம் பயங்கரவாதிகள் மத்தியில் மாண்புமிகு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை கொலை செய்யத் தூண்டிப் பேசிய தேசவிரோத நெல்லை கண்ணனை எந்த ஆன்மீக நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம் என இந்துக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
— H Raja (@HRajaBJP) December 30, 2019
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை கொலை செய்யத் (சோலிய முடிப்பீங்க) தூண்டிய நெல்லைக் கண்ணன் இன்னமும் ஏன் கைது செய்யவில்லை. கல்யாணராமனின் முகநூல் பதிவிற்கு கைது செய்து ரிமாண் செய்த காவல்துறை பிரதமர், உள்துறை அமைச்சர் விஷயத்தில் வெறும் வழக்குப்பதிவு நாடகமா?
— H Raja (@HRajaBJP) December 31, 2019
நெல்லை கண்ணன் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி. கண்ணன் பேசியுள்ளது அவதூறு பேச்சல்ல. கொலைக்கு தூண்டுதல் (சோலிய முடி). ராஜிவ்காந்தி படுகொலை போன்ற சம்பவத்தை மீண்டும் தமிழகத்தில் நடத்த திட்டமிடுவதாகவே தெரிகிறது
— H Raja (@HRajaBJP) December 31, 2019
இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் நெல்லை கண்ணனுக்கு எதிராக ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், முஸ்லீம் பயங்கரவாதிகள் மத்தியில் மாண்புமிகு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை கொலை செய்யத் தூண்டிப் பேசிய தேசவிரோத நெல்லை கண்ணனை எந்த ஆன்மீக நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம் என இந்துக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை கொலை செய்யத் (சோலிய முடிப்பீங்க) தூண்டிய நெல்லைக் கண்ணன் இன்னமும் ஏன் கைது செய்யவில்லை. கல்யாணராமனின் முகநூல் பதிவிற்கு கைது செய்து ரிமாண் செய்த காவல்துறை பிரதமர், உள்துறை அமைச்சர் விஷயத்தில் வெறும் வழக்குப்பதிவு நாடகமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நெல்லை கண்ணன் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி. கண்ணன் பேசியுள்ளது அவதூறு பேச்சல்ல. கொலைக்கு தூண்டுதல் (சோலிய முடி). ராஜிவ்காந்தி படுகொலை போன்ற சம்பவத்தை மீண்டும் தமிழகத்தில் நடத்த திட்டமிடுவதாகவே தெரிகிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.