நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டத்தை பாஜக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. விரைவில் அமல்படுத்தப்பட உள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுத் திட்டத்திற்காக ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கு நாட்டில் இருக்கும் பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அதே போல் இந்த திட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பு வராது என்றும் பாஜகவினர் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.பீகார் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய அவர், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து பிரதமர் மோடி தெளிவாக கூறியுள்ளார். தேசிய குடிமக்கள் பதிவேட்டை இந்திய முழுவதும் அமல்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என நிதிஷ் குமார் குறிப்பிட்டார். மேலும் பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க தயார் எனவும் நிதிஷ்குமார் தெரிவித்தார். பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி அங்கம் வகித்து வரும் நிலையில் என்.ஆர்.சி-க்கு எதிராக நிதிஷ்குமார் கருத்து தெரிவித்து பாஜக தரப்பிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.