Published on 02/07/2019 | Edited on 02/07/2019
அமமுக சார்பில் தென்சென்னையில் போட்டியிட்டவர் முன்னாள் அதிமுக அமைச்சரான இசக்கி சுப்பையா. இவர் இன்று தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தன்னுடைய ஆதரவாளர்களுடன் வரும் 6ஆம் தேதி அதிமுகவில் இணைவதாகவும், இந்த இணைப்பு விழா தென்காசியில் நடைபெற இருப்பதாகவும், அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார்.

அப்போது அவரிடம், அமமுக தலைமை அலுவலகம் உங்கள் கட்டிடத்தில் உள்ளதே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, 'என்னுடைய பில்டிங் என்று யார் சொன்னது. அது கம்பெனிக்கு உள்ளது. என்னுடைய மகன்தான் அதனுடைய மேலான் இயக்குநர். அவர் முடிவு எடுப்பார். ஆனால் அவரது முடிவும் தவறான முடிவாக இருக்காது. அது ஒப்பந்த விதியின்படி நடக்கும். லீஸ் அக்ரிமெண்ட் படி நடக்கும்' என தெரிவித்தார் இசக்கி சுப்பையா.