Published on 15/02/2019 | Edited on 15/02/2019

அமமுகவின் ஈரோடு மாவட்ட செயலாளர் பருவாச்சி பரணிதரன், மாணவர் அணி இணை செயலாளர் எம். பிரபு ஆகியோர் அந்தந்த பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளரான எஸ்.ஆர். செல்வம், மாநகர் மாவட்ட செயலாளர் பதவியையும் கூடுதலாக கவனிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.