Skip to main content

''நான் போற்றவும் வரவில்லை; தூற்றவும் வரவில்லை''-கலைஞர் உரையை நினைவூட்டிய ஸ்டாலின்!  

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

 Stalin reminded the kalaingar speech

 

கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக முன்பு நடந்ததை போல் சென்னை கலைவாணர் அரங்கில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 5 ஆம் தேதி துவங்கியது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம் இன்று வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான நேற்று தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவையின் கேள்வி நேரம் நேரலையாக ஒளிபரப்பாகியது.அதேபோல் இன்றும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

 

ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஒரு பகுதியாக முதல்வரின் பதிலுரை இருக்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதல்வர் அவரது நன்றியுரையைத் துவங்கி பேசினார். அதில், ''அறிவித்துள்ள திட்டங்கள் குறித்தும், அரசின் கொள்கைகள் குறித்தும் ஆளுநர் ஒவ்வொன்றாக விளக்கி பாராட்டி பேசினார். அதற்காக மாநில ஆளுநருக்கு எனது நன்றி. இவையெல்லாம் எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த பாராட்டுக்கள் இல்லை இந்த அமைச்சரவைக்கே கிடைச்ச பாராட்டு, இந்த அரசின் அங்கமாக இருக்கக்கூடிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு கிடைத்த பாராட்டு.

 

எங்களை ஆட்சிப்பொறுப்பில் அமர்த்திய மக்களுக்கு கிடைத்த பாராட்டு. அப்படிப்பட்ட உணர்வோடுதான் இந்த மாமன்றத்தில் நான் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன். திமுக ஆளுங்கட்சியாகவும் இருந்திருக்கிறது, எதிர்கட்சியாகவும் இருந்திருக்கிறது. 4/5/1957 அன்று ஆளுநர் உரைமீது பேசிய கலைஞர், 'மேன்மை தாங்கிய கவர்னர் உரையைப்பற்றி நான் போற்றவும் வரவில்லை; தூற்றவும் வரவில்லை; எனது கருத்துரையை ஆற்றவே வந்திருக்கிறேன்' என்றார்.

 

அதே நடுநிலை தவறாத பண்பைப் பெற்றிருப்பவர்கள் நாங்கள். அதிமுக ஆட்சி காலத்தில் திமுக அரசின் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டது. அதிமுக ஆட்சியில் திமுக அரசின் திட்டங்களைப் புறக்கணித்ததை போன்று திமுக அரசு செயல்படாது. அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம் மூடப்படமாட்டாது என எதிர்க்கட்சி தலைவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். 8.76 கோடி பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும்'' என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்