Skip to main content

கோகுல இந்திராவுக்குத்தான் அந்த பதவியா? அதிர்ச்சியில் வளர்மதி!

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

 

அதிமுகவில் உள்ள முக்கிய விஐபிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஏற்கனவே நடைபெற்ற சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர்களில் பலருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் நகராட்சி மற்றும் மாநகராட்சி பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால் மேயர் பதவிகளை குறிவைத்து முதல்வர் ஈ.பி.எஸ்.ஸை சந்திக்கும்போது பேசி வருகின்றனர்.

 

gokula indira - valarmathi


 

இந்த நிலையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் 25 தேதி அதிமுக நடத்தியது. முக்கிய நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்டு அந்ததந்த பகுதியில் நடத்தப்பட்டது. தென்சென்னை வடக்கு மாவட்டத்தில் எம்.எம்.டி. நகரில் நடைபெற்ற வீரவணக்கம் கூட்டத்தில் கலந்து கொண்டார் முதல்வர் ஈ.பி.எஸ். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கோகுல இந்திரா, முதல்வரை சந்தித்துப் பேசியுள்ளார்.


 

 

கட்சியில் மகளிரணி செயலாளர் பதவியை பெற வேண்டும் என்றும், மேயர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்றும் கோகுல இந்திரா காத்திருக்கும் நிலையில் இப்படி ஒரு சந்திப்பு நடந்துள்ளதை அறிந்த வளர்மதி, எங்கு கோகுல இந்திராவுக்குத்தான் அந்த பதவி போய்விடுமா என்ற அதிர்ச்சியில் உள்ளாராம். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மணிப்பூர் கலவரத்தின் பின்னணி; கனிம வளத்தைத் திருட கார்ப்பரேட் திட்டம் - வளர்மதி

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

 Valarmathi Interview

 

மணிப்பூர் கலவரத்தின் உள் அரசியல் குறித்து சமூக செயற்பாட்டாளர் வளர்மதி விளக்குகிறார்

 

மணிப்பூரில் இன்று பாதிக்கப்பட்ட தரப்பாக, ஒடுக்கப்படும் தரப்பாக இருப்பது குக்கி பழங்குடியின மக்கள்தான். ஆனால் அவர்கள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களிலும் இதற்கு முன் ஈடுபட்ட வீரியமான பழங்குடியினர்தான். மணிப்பூர் என்பது தமிழ்நாடு போன்ற மாநிலம் அல்ல. மணிப்பூர் மிகச் சிறிய மாநிலம். வெறும் 32 லட்சம் மக்கள் தொகை கொண்ட மணிப்பூர் மாநிலம், தமிழ்நாட்டின் ஒரு பெரிய மாவட்டத்தின் அளவுகூட இல்லை. எனவே மக்கள் தொகையோடு சேர்த்து இதை நாம் பார்க்க வேண்டும். 

 

மெய்தேய், குக்கி, நாகா ஆகிய சமுதாயங்கள்தான் மணிப்பூரில் முக்கியமானவை. பழங்குடியினராக இல்லாத மெய்தேய் சமூகத்தினர் திடீரென்று பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு மற்ற இரு சமூகங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அது நியாயமானதுதான். மணிப்பூரில் கனிம வளங்கள் நிரம்பியிருக்கின்றன. கனிம வளங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் வாழும் மக்கள் பொதுவாகவே கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக அரசு ஏற்படுத்தும் இதுபோன்ற பாதிப்புகளை எதிர்கொண்டுதான் வருகின்றனர். 

 

இந்தக் கனிம வளத்தை அடைவதற்காகத் தான் இவ்வளவும் நடத்தப்படுகின்றன. இதற்குள் இருக்கும் கனிமவள அரசியலை யாரும் பேசுவதில்லை. மணிப்பூரில் நடக்கும் கொடுமைகளைப் பார்க்கும்போது நமக்கு தூக்கம் வரவில்லை. இவ்வளவு கொடூரமாக மனிதர்கள் இருப்பார்களா என்று தோன்றுகிறது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அனைத்து பழங்குடி இயக்கங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டனர். இந்துத்துவ சித்தாந்தம் கொண்ட, பாஜகவைச் சேர்ந்த, ஆயுதம் தாங்கிய இளைஞர்கள்தான் இதைச் செய்கிறார்கள் என்று நீதிமன்றத்தில் அவர்கள் கூறினர்.

 

இது ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் நடத்தப்படும் கலவரம்தான். போலீசார்தான் தங்களைக் கலவரக்காரர்களிடம் கொண்டுபோய் விட்டனர் என்று அங்குள்ள பாதிக்கப்பட்ட பெண்கள் சொல்கின்றனர். பழங்குடியினப் பெண்ணை குடியரசுத் தலைவராக நாங்கள் ஆக்கினோம் என்று பெருமை பேசிய இவர்கள், இன்று பழங்குடியின பெண்கள் பாதிக்கப்படும்போது அமைதியாக இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் மீது குஜராத்தில் தாக்குதல் நடத்தியது போல, கிறிஸ்தவர்கள் மீது இப்போது மணிப்பூரில் தாக்குதல் நடத்துகிறார்கள். 

 

மணிப்பூர் விவகாரத்தில் வீடியோ மட்டும் வெளிவராமல் இருந்திருந்தால் பிரதமர் இதுகுறித்து பேசியிருக்க மாட்டார். குற்றவாளிகளில் ஒருவனுடைய வீட்டை அங்கிருக்கும் பெண்களே தீ வைத்துக் கொளுத்தினர். எங்கேயோ மணிப்பூரில் தானே இந்தப் பிரச்சனை நடக்கிறது என்று நாம் இதை சாதாரணமாகக் கடந்துவிட்டால், நாளை இது நமக்கும் நடக்கும். எங்களைப் போன்ற போராட்டக்காரர்கள் போராடுவது தேவையற்றது என்று பலர் நினைத்திருந்தனர். நாங்கள் ஏன் போராடுகிறோம் என்பது இப்போது அவர்களுக்குப் புரிந்திருக்கும்.

 

 

 

Next Story

ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகவின் அடுத்தடுத்த திட்டங்கள்..ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

EPS-led AIADMK's next plans

 

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் இருக்கக் கூடிய அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், காமராஜ், தங்கமணி, பொன்னையன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

 

அதிமுக தற்போது இரு தரப்பாக இருக்கும் நிலையில் மொத்தம் இருக்கக்கூடிய 75 மாவட்ட செயலாளர்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள 69 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். 61 பழனிசாமி சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

அதிமுகவின் பொன்விழா ஆண்டினை முன்னிட்டு தமிழகம் எங்கும் பொதுக்கூட்டம் நடத்த இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் 17ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

அதிமுகவின் துணை சட்டப்பேரவைத் தலைவராக இருந்த ஓபிஎஸ் மற்றும் துணை கொறடாவாக இருந்த மனோஜ் பாண்டியனையும் நீக்கி புதிய துணை சட்டப்பேரவை தலைவராக ஆர்.பி.உதயகுமாரையும் துணை கொறடாவாக  அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் நியமித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டப்பேரவைக்கு கடிதம் வழங்கி இருந்தது. இது குறித்து சபாநாயகர் முடிவு ஏதும் எடுக்காத நிலையில் அது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.