Published on 16/07/2019 | Edited on 16/07/2019
தமிழகத்திலிருந்து திமுக மற்றும் அதிமுக சார்பாக தலா 3 பேர் ராஜ்யசபா எம்.பி ஆகியிருக்கிறார்கள். மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் முடிஞ்சதும், அமைச்சரவை விரிவாக்கத்தைச் செய்யப்போறாராம் மோடி. அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ராஜ்யசபாவுக்குப் போகும் பா.ம.க. அன்புமணி எப்படியும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றே ஆகணும்னு விரும்புகிறார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர். டெல்லியில் மோடியிடமும் அமித்ஷாவிடமும் வாழ்த்துப்பெறும் போது, மந்திரி பதவி குறித்த தன் கோரிக்கையை அவர்களிடம் அழுத்தமாக வைக்கத் திட்டமிட்டிருக்காராம் அன்புமணி.
அதேபோல் அ.தி.மு.க.விலிருந்து ’ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கும் அ.தி.மு.க.வின் சீனியர்களில் ஒருவரான வைத்திலிங்கத்துக்கும் எப்படியாவது அமைச்சர் விரிவாக்கத்தில் மந்திரி பதவி வாங்கிடணும்னு அதிமுக தரப்பு இருப்பதாக கூறுகின்றனர். இதில் ஒரு அமைச்சர் பதவி தான் அதிமுகவிற்கு கொடுக்க முடியும் என்று பாஜக சொல்லிவிட்டால் மீண்டும் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பிடையே சலசலப்பு ஏற்பட வாய்ப்பும் அதிகமாக உள்ளது என்கின்றனர்.