Published on 01/07/2019 | Edited on 01/07/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றது. இதில் பாமகவிற்கு 7 நாடாளுமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுப்பதாக அறிவித்தனர். தேர்தலில் பாமக போட்டியிட்ட அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் ஜூலை 18-ல், தமிழ்நாட்டில் ராஜ்யசபா தேர்தல் நடக்க இருக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 இடங்களில் அ.தி.மு.க. மூன்று பேரைத் தேர்ந்தெடுத்தாகணும். இதில் ஏற்கனவே செய்துகொண்ட தேர்தல் உடன்படிக்கையின் படி பா.ம.க.வுக்கு ஒரு ராஜ்யசபா பதவியைக் கொடுத்தாகணும். ஆனால், பா.ம.கவுக்கு சீட் தரக்கூடாதுன்னு வட தமிழக அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் முதல்வர் எடப்பாடியிடம் வலியுறுத்தறாங்க.
இது தொடர்பா ஓ.பி.எஸ்.சிடம் எடப்பாடி ஆலோசிச்சப்ப, பா.ம.க.விடம் நாம் சொன்னபடி நடந்துக் காட்டி, நம் நம்பகத்தன்மை கேள்விக்குறியாயிடும். அதனால், அவங்களுக்கு ஒரு சீட்டை ஒதுக்குவதுதான் சரின்னு ஓ.பி.எஸ். சொல்லியிருக்கிறார். அதுதான் என்னுடைய எண்ணமும்ன்னு சொன்ன எடப்பாடி, கட்சியில் இதற்கான எதிர்ப்புகளை எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியலைன்னு கவலையில் இருப்பதாக சொல்கின்றனர். மேலும் அதிமுகவில் இருக்கும் சீனியர்கள் ராஜ்யசபா சீட் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அதிமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதனால் பாமகவிற்கு சீட் கொடுத்து விட்டால் மீதமுள்ள இரண்டு சீட்டுகளை யாருக்கு கொடுப்பது என்று டென்ஷனில் அதிமுக தலைமை இருப்பதாக சொல்லப்படுகிறது.