தமிழகத்தில் எதையாவது செய்து ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என நினைக்கும் பா.ஜ.க., இன்னொரு பக்கம் இங்கு இருக்கும் எல்லா அரசியல் கட்சியையும் மிரட்டி பாஜக சொல்வதை கேட்க வைக்க வேண்டும் என்று டெல்லி நினைப்பதாக சொல்லப்படுகிறது. தன் தோழமைக் கட்சிகளை மட்டுமல்லாது, தன் அரசியல் எதிரிகளையும் தன்வசம் உள்ள பவர்ஃபுல் புலனாய்வு அமைப்புகள் மூலம் அடக்கி ஆளப்பார்க்கிறது பா.ஜ.க. அதேபோல் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றதும், வருமான வரித்துறை தீவிரமாக முடுக்கிவிடப்பட்ட்டுள்ளதாக கூறுகின்றனர்.
அண்மையில் அமைச்சர் செங்கோட்டையனின் பினாமியான சிறுமுகை சுப்பிரமணியன் அசோக்குமார் என்பவரை மடக்கியது வருமான வரித்துறை. இவர் அன்னை இன்பரா டெவலப்பர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரை ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு வழக்கில் கைது செய்த வருமான வரித்துறை, அவர் தொடர்பான இடங்களில் ரெய்டை நடத்தி, அவர் வெளிநாடுகளில் 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் செய்திருப்பதைக் கண்டுபிடித்து, ஆளும்கட்சித் தரப்புக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு என்று கூறுகின்றனர். இதேபோல் சசிகலா தரப்பின் 9 போலி கம்பெனிகளைக் கண்டுபிடித்து ஏறத்தாழ 1600 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி வைத்து, அந்தந் தரப்புக்கும் ஷாக் கொடுத்துள்ளது பாஜக என்று அரசியல் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.