
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் தங்களது கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். தேனி மாவட்டத்தில் அடுத்த முதலமைச்சர் ஓ.பி.எஸ். என போஸ்டர் ஒட்டப்பட்டது. இதையடுத்து மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியாக இதுபோன்று கருத்துகளை பேசக்கூடாது என கட்சியினருக்கு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
இருப்பினும் அதிமுகவினரிடையே இந்த விவாதம் நடந்து கொண்டே இருக்கிறது. திண்டுக்கல் நகரில் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் என்றும், எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் என்றும் போஸ்டர் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர் எனவும் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் எனவும் அச்சடிக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவினரிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.