
நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் இடம்பெற்றுள்ள முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை நான்கு என இருந்த நிலையில் அதை இரண்டாக குறைத்து இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
முன்பதிவில்லா பெட்டிகளுக்கு பதில் ஏசி 3 டயர் பெட்டிகளை இணைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு முன்பதிவில்லா பெட்டியில் சராசரியாக 350 பேர் பயணிக்க முடியும் என்ற சூழல் இருக்கும் நிலையில் ரயில்வே நிர்வாகம் 600 முதல் 700 டிக்கெட்களை வழங்கி வருகிறது. இந்திய ரயில்வே துறையின் இந்த நடவடிக்கையால் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பக்கமான 'எக்ஸ்' பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 'சமூக வலைத்தளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்! அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு!' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.