சென்னை மெரீனா கடற்கரையில், நடை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களிடமும், பொழுதுபோக்குக்காக வந்திருந்தவர்களிடமும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் இன்று துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். இதனை மஜக பொதுச் செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி தொடங்கி வைத்தார்.
லைட் ஹவுஸ் அருகில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த மீனவ சமூக பெண்கள், "எப்படியாச்சும் சாராயக் கடைகளை பூட்டுங்க" என ஒரு சேர கூறினர்.
பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த மு.தமிமுன் அன்சாரி, காந்தியடிகளின் 150வது ஆண்டு தினமான அக்டோபர் 2 தொடங்கி, தினமும் ஆயிரக்கணக்கான மஜக தொண்டர்கள் மது எதிர்ப்பு பரப்புரையை 12 வகையான வடிவங்களுடன் முன்னெடுத்து வருவதாக கூறினார்.
மக்களின் பேராதரவை அடுத்து, அக்டோபர் 15 அன்றுடன் முடியவிருந்த இப்பரப்புரையை அக்டோபர் 20 வரை நீட்டித்திருப்பதாகவும் கூறினார். தமிழக அரசு பூரண மது விலக்கை அமல்படுத்தி, தமிழ்நாட்டு தாய்மார்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
"மதுவை ஒழிப்போம் - மனிதம் காப்போம் " என்ற வாசகங்கள் அடங்கிய டீ.ஷர்ட்டுகளுடன் மஜகவினர் மெரீனா கடற்கரை முழுவதும் 2 மணி நேரமாக வலம் வந்தது பரப்புரையில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலர் பிஸ்மி, மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் சாகுல், தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கையூம், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் அப்பாஸ், வடசென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஓட்டேரி அப்பாஸ், துணைப் பொதுச் செயலாளர் தைமியா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனீஸ், ஷமீம் அஹ்மது, பொறியாளர் சைபுல்லாஹ், ஷஃபி ஆகியோர் துண்டு பிரசுர வினியோகத்தை மேற்கொண்டனர்
.