Skip to main content

மர்மமான முறையில் உயிரிழந்த அரசு ஊழியரின் குடும்பம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 21/02/2025 | Edited on 21/02/2025

 

 

IRS Officer and his Family passed away mysteriously in kerala

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் மணீஷ் அகர்வால். இவர் கேரளா ஜிஎஸ்டி ஆணையர் அலுவலகத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் சில தினங்களுக்கு முன்பு, ஆறு விடுப்பு எடுத்திருந்தார். விடுமுறை முடிந்த பிறகு, அவர் அலுவலகத்திற்கு செல்லவில்லை. இதில் சந்தேகமடைந்த சக ஊழியர்கள், நேற்று மாலை அவரது வீட்டிற்கு வந்தனர். அங்கு துர்நாற்றம் வீசியதால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், மணீஷ் அகர்வாலின் வீட்டு கதவை உடைத்து சென்று பார்த்துள்ளனர். அங்கு, மணீஷின் தாய் சகுந்தலாவின் உடல் வெள்ளை துணியால் மூடப்பட்டு பக்கத்தில் பூக்கள் வைக்கப்பட்டிருந்தது. மேலும், மணீஷ் மற்றும் அவரது சகோதரி ஷாலினி உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தது. மூன்று பேரும் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மணீஷ் மற்றும் அவரது சகோதரி ஷாலினி இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. 2011 ஐஆர்எஸ் பிரிவைச் சேர்ந்த மணீஷ், கேரளாவில் உள்ள ஜிஎஸ்டி ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவரது சகோதரி ஷாலினி, கடந்த சில மாதங்களாக தனது சகோதரர் மற்றும் தாயாருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், தான் அவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். தாய் சகுந்தலா கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்