தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நிறைவடைந்த நிலையில் தற்போது வரை உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசும் , உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பில் உள்ள தமிழக மாநில தேர்தல் ஆணையமும் அவ்வப்போது ஒரு சில காரணங்களைக் காட்டி தேர்தல் நடத்தாமல் உள்ளது . இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்நிலையில் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தால் மற்றும் புயல் உள்ளிட்ட அனைத்து காரணங்களையும் நீதிமன்றத்தில் கூறி கால அவகாசத்தைப் பெற்று வருகிறது . இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மே மாத இறுதியில் தமிழக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்து தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
அதில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு இன்னும் செய்யாததாலும் , இந்திய தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலை தமிழக மாநிலத்தேர்தல் ஆணையம் பெறாததால் தற்போதைக்கு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆகையால் உள்ளாட்சித்தேர்தல் மீண்டும் தள்ளிப்போகியுள்ளது . அதனைத் தொடர்ந்து அதிமுக அரசு தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலின் முடிவுகளுக்கு பின்னரே அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை சந்திக்கலாமா? என்ற நிலைப்பாட்டை எடுக்க உள்ளது . மேலும் அதிமுகவுடன் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கட்சி இணையும் பட்சத்தில் அதிமுக தலைமை உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது . அதே போல் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா சிறையில் இருந்து வெளி வர வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகின, எனவே அதிமுக கட்சித் தலைமை அவரின் ஆதரவுடனும் உள்ளாட்சி தேர்தலை சந்தித்து வெற்றி பெற ஆயத்தமாகி வருவதாக அரசியல் கட்சி வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர். தமிழக மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் வெற்றியை மட்டும் கருதி செயல்படும் அதிமுகவின் முயற்சி தேர்தலுக்கு பின்பு எப்படி அமையும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.