
ஓபிஎஸ் தம்பி ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதிமுக குடும்பக் கட்சி இல்லை என்று சொந்தத் தம்பியையே கட்சியை விட்டு நீக்கினார் ஓபிஎஸ் என அதிமுகவினர் புகழ் பாடினர். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ராஜா அடுத்தக்கட்டமாக செந்தில் பாலாஜி ஸ்டைலில் திமுகவில் சேர முடிவு செய்தார். இதற்கான பணிகள் நடந்துகொண்டிருந்தன. இதைப்பற்றி கேள்விப்பட்ட அதிமுகவினர் அவரை தொடர்பு கொண்டார்கள், அவர்களிடம் முதலில் ராஜா பேசவில்லை. அதன்பிறகு அவர் தன்னிடமிருந்த ஒருசில ஆதாரங்களைக் காட்டினார். அதில் ராஜாவைக் கட்சியை விட்டே நீக்க வேண்டுமென கொடிபிடித்த ஆர்.பி. உதயக்குமார் மற்றும் எடப்பாடியின் சொத்து விவரங்கள் இருந்தன.
நான் இதையெல்லாம் திமுக தலைமையிடம் கொடுத்தால் என்ன ஆகுமென்று சிந்தித்து பாருங்கள். எனக்கு ஓபிஎஸ் அண்ணன் அவரைக்காட்டிக் கொடுக்க நான் நினைக்க மாட்டேன். அவரது அனைத்து சொத்து விவரங்களும் எனக்கு தெரியும். அதேபோல் அதிமுகவிலுள்ள அனைத்து அமைச்சர்கள் கடந்த 2 ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்பது பற்றிய ஊழல் விவரங்களும் என்னிடம் இருக்கிறது. இதைத்தான் திமுகவினர் என்னிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். இதைக்கொடுத்தால் போதும், அதிமுக அமைச்சர்கள் சசிகலாவைப்போல் ஜெயிலுக்கு போய்விடுவார்கள் என அவர் மிரட்டல் தொணியில் பேசினார்.
ஏற்கனவே இன்கம்டேக்ஸ், சிபிஐ என மத்திய அரசின் பிடியில் சிக்கித்தவிக்கும் அதிமுக அமைச்சர்களின் குடுமி சிபிஐ வசம் சென்றால் அவ்வளவுதான் என இந்தத்தகவலை கேட்ட எடப்பாடி அதிர்ந்து போனார். உடனே அவர் ஓபிஎஸ்-ஐ தொடர்புகொண்டு பேசினார். நான் கொடுத்த அழுத்தத்தால்தான் நீங்கள் உங்கள் தம்பியைக் கட்சியை விட்டு நீக்க சம்மதித்தீர்கள். இந்த முடிவு நமக்கு ஆபத்தாக முடியப் போகிறது என எடப்பாடி சொன்னதையடுத்து தனது குடும்ப உறுப்பினர்களிடம் ஆலோசனை கேட்டார் ஓபிஎஸ். ராஜாவிற்கு நாம் சேர்த்த சொத்து விவரங்கள் அனைத்தும் அத்துப்படி. அவர் உதயக்குமார், எடப்பாடி ஆகியோரைவிட, திமுகவுடன் சேர்ந்து நம்மைதான் அதிகமாக குறிவைப்பார் என குடும்ப உறுப்பினர்கள் எடுத்து சொன்னதால் ராஜாவை மறுபடியும் கட்சிக்குள் சேர்க்க எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் சம்மதித்தார்கள். அடுத்தபடியாக தமிழ்நாடு கூட்டுறவு, பால்வள சேர்மன் பதவியும் ஓபிஎஸ் தம்பி ராஜாவுக்கே அளிக்கப்படும் என்கிற உறுதியும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்படி மிரட்டியே அதிமுகவிற்கு திரும்பியுள்ளார் ராஜா...