Published on 17/12/2018 | Edited on 17/12/2018

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரனுடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 9 பேர் சந்தித்தனர். தங்க தமிழ்ச்செல்வன், கதிர்காமு, உமா மகேஸ்வரி, பார்த்திபன், ஏழுமலை, மாரியப்பன் கென்னடி, சுப்பிரமணியன், கோதண்டபானி, தங்கதுரை ஆகிய 9 பேர் தினகரனுடன் சென்று சந்தித்தனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ள நிலையில், அமமுகவினருக்கு அதிமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், அமமுகவைப் பார்த்து ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் பயப்படுகிறது. அமமுகவில் யாரும் அதிருப்தியில் இல்லை என்றார்.