நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப். 13ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (மார்ச் 13ம் தேதி) துவங்கியது. இந்த இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரண்டாம் அமர்வு இன்று துவங்கியதும் மறைந்த தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பிறகு கூட்டத்தொடர் துவங்கியது. அப்போது காங்கிரஸ் கட்சி எம்.பி. தீபக் பாய்ஜ், அதானி குழுமத்துக்கு வங்கிகள் வழங்கியிருக்கும் கடன் விவரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆர்.பி.ஐ. சட்டத்தின்படி எந்தவொரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வழங்க முடியாது. எனவே, அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.