Published on 20/04/2019 | Edited on 20/04/2019
வரும் மே 19ம் தேதி அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதுகுறித்த ஆலோசனை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் துரைமுருகன், கனிமொழி, ஆர்.எஸ். பாரதி, ஐ.பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். முதலில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் தொகுதிகள் குறித்த ஆலோசனையும், பின்னர் அரவக்குறிச்சி, சூலூர் தொகுதிகள் குறித்த ஆலோசனையும் நடக்கிறது.