தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நேற்று நடைபெற்றது. ஏற்கனவே சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த 5 மாநிலங்களில் அதிக பொதுக்கூட்டங்களில் பிரச்சாரம் செய்தவர் என்ற பெயரை யோகி ஆதித்யநாத் தட்டிச் சென்றுள்ளார்.
5 மாநிலங்களிலும் சேர்த்து பிரதமர் மோடி 31 கூட்டங்களிலும், அமித் ஷா 56 கூட்டங்களிலும் பேசியுள்ளார். ஆனால் யோகி ஆதித்யநாத் 74 பொது கூட்டங்களில் பேசியுள்ளார். பொதுவாக தேர்தல் சமயங்களில் பா.ஜ.க வில் மோடி தான் நட்சத்திர பேச்சாளராக இருப்பார். ஆனால் இந்த முறை யோகி அவரை முந்தியுள்ளார். மேலும் யோகி பங்கேற்ற கூட்டங்கள் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் பல சர்ச்சைகளையும் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.