தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் பெண்கள், சிறுவர்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் ஏன் உறுதிப் படுத்தவில்லையென பாராளுமன்றக் குழு கேள்வியெழுப்பியுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான அத்துமீறல்களை ஏன் இம்மாநிலங்கள் கட்டுக்குள் வைக்கத் தவறின. இவர்களின் பாதுகாப்புக்கென ஒதுக்கப்பட்ட தொகை ஏன் மிகக் குறைவாகச் செலவிடப்பட்டுள்ளது என குழுவால் கேள்வியழுப்பப்பட்டுள்ளது.
பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினரான சின்கா, 2016-ல் காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை 27,316 ஆக இருந்தது, 2017-ல் 33,964 ஆக அதிகரித்ததைச் சுட்டிக்காட்டி மகாராஷ்டிர காவல்துறை பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தவறிவிட்டதாகவும் இத்தகைய பெண்கள் உள்நாட்டுக்குள்ளும் வெளிநாட்டுக்கும் கடத்தப்படுவதையும் குறிப்பிட்டு இத்தகைய நிகழ்வுகள் தடுக்கப்படவேண்டும் என்றார்.
தமிழகத்தில் 1 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாகவும், சென்னையில் மட்டும் 14,000 பேர் செயல்படுவதாகவும், ஆனால், இதைக் கட்டுப்படுத்த பெரிய அளவில் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என குழு குறிப்பிட்டுள்ளது.