Published on 03/10/2018 | Edited on 03/10/2018

சபரிமலைக்குள் 10 முதல் 50 வயதுகுட்பட்டோர் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்ததை எதிர்த்து நேற்று கேரளாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பேரணி நடத்தினர்.
இந்த பேரணி பந்தளம் ராஜா தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த பேரணியில் பெண்களுடன் அரச குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட பெண்களின் கோரிக்கை,” 10 முதல் 50 வயதுகுட்பட்ட பெண்களை சபரிமலைக்குள் செல்ல அனுமதிக்கக்கூடாது, கோவில் ஐதீகத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்றனர். பந்தளம் மருத்துவ மிஷனில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் வள்ளியோக்கில் உள்ள சாஸ்தா கோவில் வரை நடைபெற்றது.