கேரளாவில் உம்மர் என்பவரின் மகள் ஹீனா கேரளாவில் உள்ள மதராசா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே படிப்பு, ஆடல் ,பாடல்,நடிப்பு என அனைத்திலும் ஆர்வம் கொண்ட மாணவி ஹீனா ஒரு குறும்படத்தில் சந்தனப்பொட்டு வைத்து நடித்தார் என்ற காரணத்தினால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று அவரது தந்தை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவரது தந்தை அவரது முகப்புத்தகத்தில் எனது மகள் பள்ளியிலும் சரி மதராசாவிலும் சரி நல்ல திறமைகளை வெளிக்காட்டி வருகிறாள். மதராசா சார்பில் நடைபெற்ற பொதுதேர்வில்கூட 5-ஆம் இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளாள் . ஆனால் ஒரு குறும்படத்தில் சந்தனப்பொட்டு வைத்து நடித்துவிட்டார் என்ற காரணத்திற்காக அவர் இப்போது மதராசாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நல்லவேளை கல்லெறிந்து கொல்லும் தண்டனையை அவளுக்கு கொடுக்கவில்லை என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு சில நொடிகளிலேயே வைரலாகியது. அதனை தொடர்ந்து மதராசாவையே எதிர்த்துள்ளார் மாணவியின் தந்தை என அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. ஆனால் சிலர் இது இஸ்லாம் மதத்தை கெடுக்கும் செயல்பாடு எனவும் பதிவிட்டனர்.
இதனையடுத்து தனது அடுத்த பதிவில் தான் தனது மதத்தை மதிக்கிறேன். மேலும் மனித உணர்வுகளை நேசிக்கிறேன். இதை வைத்து மத பூசலை உருவாக்க திட்டமிடாதீர்கள் என்றும் உருக்கமாக கூறியுள்ளார்.