சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்கிற அச்சத்தில் எல்லோரும் உள்ளனர். இதுமட்டும் அல்லாது வருகின்ற நவம்பர் 4 அடுத்து இந்தியா ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இந்த நெருக்கடிக் காரணமாக இந்தியாவில் எண்ணெய், எரிவாயு ஆய்வில் ஈடுபடுவதற்கும், இவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுவதாக இருந்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தக் கூட்டத்தில் சவூதி அரேபியாவின் எண்ணெய் துறை அமைச்சர் காலித் அல் ஃபாலி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் உள்ளிட் டோர் பங்கேற்றனர். அப்போது சவூதி அரேபிய அமைச்சர் காலித் கூறுகையில், ‘‘கச்சா எண்ணெய் சப்ளை மட்டுமே எங்கள் கீழ் இருக்கிறது. அதற்கு தேவையான உதவிகளை இந்தியாவுக்கு செய்வது என்றால் அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் விலை குறைப்பு என்பது எங்கள் கீழ் இல்லை. இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு எங்களால் சுத்தமாக உதவ முடியாது” என்றார்.
Published on 16/10/2018 | Edited on 16/10/2018