உக்ரைனில் 8வது நாளாக போர் நீடிக்கும் நிலையில், குவாட் நாடுகளின் தலைவர்கள் காணொளி வாயிலாக இன்று (03/03/2022) ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்கவிருக்கிறார்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா இணைந்த அமைப்பு குவாட். உக்ரைனில் போர் நீடிக்கும் நிலையில், குவாட் நாடுகளின் தலைவர்கள் இன்று (03/03/2022) ஆலோசனை நடத்தவிருக்கின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ ஆகியோர் இந்தோ- பசிபிக் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளன.
அப்போது உக்ரைன் விவகாரம் குறித்தும் தலைவர்கள் பேசுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் ரஷ்யா ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தி வரும் நிலையில், இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.