Skip to main content

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரை தூக்கில் போட ஒத்திகை

Published on 08/01/2020 | Edited on 08/01/2020

   

ட்


நிர்பயா குற்றவாளிகள் அக்சய் குமார்சிங், வினய்சர்மா, பவுன்குப்தா, முகேஷ்சிங் ஆகிய 4 பேரையும் வருகிற 22-ந்தேதி தூக்கில் போட டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.   4 பேரையும் தூக்கிலிட இன்னும் 2 வாரங்களே இருப்பதால் அதற்கு முந்தைய நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதன் ஒரு பகுதியாக திகார் சிறையில் தூக்கில் இடுவதற்கான ஒத்திகை நடைபெறுகிறது.

 

4 பேரையும் தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. தூக்கில் தொங்க விடுவதற்கான இடம் தயார் செய்யப்பட்டு விட்டது.   தூக்கில் தொங்க விடுவதற்கான இடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. கயிறு, முகமூடிகளும் வாங்கப்பட்டு தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

 

தூக்கில் போடப்படும் 4 குற்றவாளிகளின் உடல் எடைக்கு ஏற்ப 60 கிலோ பொம்மைகள் தயார் செய்யப்பட்டு தூக்கில் போடப்பட்டு ஒத்திகை நடத்தப்படுகிறது. கயிறு வலுவாக உள்ளதா? தூக்கில் தொங்கவிடப்படும் பகுதி சரியாக இருக்கிறதா? என்பது பற்றி ஆய்வு செய்யப்படுகிறது.

 

இதற்கிடையே 4 குற்றவாளிகளும் டெல்லி திகார் ஜெயிலில் தனித்தனி அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு காலை-மாலை இரு நேரமும் டாக்டர்கள் மூலம் உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

 

4 குற்றவாளிகளுக்கும் தனித்தனியாக உணவு வழங்கப்படுகிறது. அவர்களில் 3 பேர் 2-ம் எண் ஜெயில் பகுதியில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒருவன் மட்டும் 4-ம் எண் ஜெயில் பகுதியில் அடைக்கப்பட்டுள்ளான்.  மற்ற கைதிகளுடன் அவர்கள் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் 4 பேரும் பீதியுடன் காணப்படுகின்றனர். அவர்களை திகார் சிறை அதிகாரிகள் குழு ஒன்று கண்காணித்து வருகிறது.

சார்ந்த செய்திகள்