Published on 20/01/2022 | Edited on 20/01/2022
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை, ஏழு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், முன்வார்பூர் கிராமத்திற்குத் தேர்தல் பிரச்சாரம் செய்யச் சென்ற பாஜக எம்.எல்.ஏவான விக்ரம் சைனி, மக்களால் விரட்டப்பட்டுள்ளார். விக்ரம் சைனியைக் கண்டதும் முன்வார்பூர் கிராம மக்கள் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வேறு வழியின்றி அவர் திரும்பிச் சென்றுள்ளார்.
The BJP MLA Vikram Saini used to be ousted through villagers in his constituency forward of the UP elections #ModiRuinedDemocracy #UPElection2022 pic.twitter.com/ofSptfYc1w— Das Vanthala (@DasVanthala) January 20, 2022
இதுதொடர்பான வீடியோ, சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், தனது வருகையை எதிர்த்தவர்கள் மதுபோதையில் இருந்ததாக விக்ரம் சைனி கூறியுள்ளார்.