Published on 24/06/2020 | Edited on 24/06/2020

இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வரும் நிலையில் பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கல்வி மையங்கள் போன்றவை காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அக்டோபர் மாதத்திற்கு முன்பு புதிய மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த வேண்டாம் என ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையிலான நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது. அதேபோல் பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்ய யுஜிசி நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தேர்வு நடத்தினால் சுகாதாரப் பிரச்சினை ஏற்படும் என தெரிவித்துள்ள அந்த குழு முந்திய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த அனுமதி தரலாம் எனவும் கூறியுள்ளது.