Published on 04/10/2018 | Edited on 04/10/2018
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து அருண் ஜெட்லி பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி பேசினார். அப்போது, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி ரூ 1.50 குறைக்கப்பட்டுள்ளது.உற்பத்தி வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை ரூ. 2.50 குறைகிறது.மேலும், இந்த நடவடிக்கையால் சாமானிய மக்களுக்கு ரூ 5.00 லாபம் இருக்கும்.மத்திய அரசு உற்பத்தி வரியை குறைத்த அதே அளவை மாநில அரசுகளும் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். உற்பத்தி வரி குறைப்பால் மத்திய அரசுக்கு 10,500கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குஜராத், மகாராஷ்டிரா, அஸ்ஸாம் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் பெட்ரோல், டீசல் விலை மீதான வரியை குறைக்க இயலாது என ஆந்திரா, கேரள அரசுகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.