புல்வாமா தாக்குதல் குறித்த குற்றப்பத்திரிகையில் ஜே.இ.எம். தீவிரவாத அமைப்பை சேர்ந்த மசூத் அசார் உட்பட 19 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
பிப்ரவரி 14, 2019- அன்று, ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் இந்திய வீரர்கள் சென்ற பேருந்து மீது 200 கிலோ எடைகொண்ட வெடிமருந்து நிரப்பப்பட்ட கார் ஒன்று மோதியது. பயங்கரவாதிகளின் இந்த சதித்திட்டதால் 40 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தேசிய புலனாய்வு முகமை நேற்று இதற்கான குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தது. சுமார் 13,000 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கை ஜம்முவில் உள்ள நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, 35 கிலோ அதிசேத விளைவிப்பு ஆர்.டி.எக்ஸ் வெடிபொருள் மார்ச்-மே 2018-ற்குக் இடையே மூன்று தடவையாக பாகிஸ்தானிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் - ஜம்மு எல்லையின் ஹிராநகர் செக்டாரிலிருந்து ஊடுருவி இந்த பொருட்களை இங்கு கொண்டு வந்துள்ளனர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஜே.இ.எம். தீவிரவாத அமைப்பை சேர்ந்த மசூத் அசார் உட்பட 19 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.