மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் இன்று தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. முதல் நாளிலேயே மழை வெளுத்து வாங்குவதால் மும்பை நகரங்களில் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அடுத்த நான்கு நாட்களிலும் பலத்த மழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற.
தென்மேற்கு பருவ மழை கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் பருவ மழை பெய்துவருகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டது. இந்த நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தென்மேற்கு பருவ மழை இன்று தொடங்கியுள்ளது. காலையில் இருந்தே மழை அடித்து பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கடலோர பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்கள் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்ய இருக்கிறது. இதனால் மும்பைக்கு வெள்ளஅபாய எச்சரிக்கைவிடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது