தண்டவாளத்திற்கு பதிலாக வயல்வெளியின் நடுவே ரயில் இன்ஜின் இயக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், வாசிர்கஞ் ரயில் நிலையத்தில் இருந்து எந்த பெட்டிகளும் இல்லாமல் ரயில் இன்ஜின் ஒன்று கயா என்ற மாவட்டத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது.
ரகுநாத்பூர் கிராமம் அருகே , லூப் லைன் எனப்படும் கிளை தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த ரயில் இன்ஜின், குறிப்பிட்ட இடத்தில் மெயின் லைனில் இணையாமல் நேராக சென்றது. இதில் சுதாரித்துக்கொண்ட ரயில் ஓட்டுநர், ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பினார். இதனையடுத்து, ரயில் இன்ஜின் சிறிது தூரம் சென்று தண்டவாளம் முடிவில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டையை இடித்து தள்ளியப்படி வயல்வெளியில் இறங்கியது. இதனை கண்ட அக்கிராம மக்கள், தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த காங்கிரஸ் கட்சி, ரயில்துறை அமைச்சரை ரீல் அமைச்சர் என விமர்சனம் செய்துள்ளது. மேலும் அப்பதிவில், ரீல் செய்வதற்கு இந்த வீடியோ உதவும் எனவும் விமர்சித்துள்ளது.
रील मंत्री जी,
बिहार में 'छोटी घटना' हो गई. एक इंजन चलते-चलते खेत में उतर गया.
आप रील बना लीजिए, ये रहा वीडियो 👇 pic.twitter.com/crbNWsaXZX— Congress (@INCIndia) September 15, 2024